Table of Contents
எந்த வகையான மரங்கள் அதிக மழையை கொடுக்கும்?
வேம்பு, ஆலமரம், அரசமரம், புங்கை, அத்தி ஆகிய மரங்கள் நம் மண் சார்ந்த மரங்கள். இவை மழையை வரவழைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. குளிர்ச்சியை உண்டுபண்ணுவதில் இந்த மரங்கள் முதன்மையானவை. ஆகவே இந்த மரங்க நட்டு மழை அளவை அதிகரிக்கசெய்யலாம்.
இந்த மரங்களை பற்றி அறிவதற்கு முன் மண் சாரா மரங்களை பற்றி.
மழையை குறைக்கும், நிலத்தடி நீர் மற்றும் வளிமண்டல நீரை அதிக அளவு உருஞ்சும் மண் சாரா மரங்கள் இந்த சீமககருவேலம் மற்றும் யூகலிப்டஸ் என்று சொல்லப்படும் தைல மரம்.
இந்த தைல மரத்தை பற்றி தெரிந்தும் அரசே இதை வளர்ப்பதும், இதை வளர்ப்பதற்கு மானியம் தந்து ஊக்குவிப்பதும் வேதனையிலும் வேதனை.
இந்த மரங்கள் பூமியின் என்பது அடி ஆழத்திற்கும் மேல் சென்று நீரை உருஞ்சிவிடும். பொதுவாக இந்த மரங்கள் ஆங்கிலேயர்கள் நம் நாட்டை விட்டு செல்லும் போது இந்த விதைகளை தூவி சென்று விட்டதாக சொல்லப்படுகிறது. அதாவது நமது விவசாயத்தையும், இயற்கை வளங்களையும் சீரிழிக்க அவர்கள் செய்த சதி என்று சொல்லப்படுகிறது.
சீம கருவேலம் அதிக அளவு வளிமண்டல பிராண வாயுவை உறிஞ்சும் தன்மை கொண்டது, மேலும் அதிக அளவு கார்பன்டை ஆஹ்சைடுவையும் வெளியிடுகிறது. இது விறகுக்காக பயன்படுவதை தவிர வேறொரு பயனும் இல்லை.
மழை தரும் மரங்கள்
ஆலமரம்: மிகச்சிறிய விதை ஆனால் மிகப்பெரிய மரம். நல்ல உடல் பலத்தையும் ஆண்மையையும் கொடுக்கும் பழம் ஆலம் பழம். தந்தை மகன் உறவு பற்றி சொல்லும் போது இந்த ஆல மரத்தை ஒப்பிடுவார்கள். விழுது மரத்திற்கு துணையாவது போல தந்தையை மகன் காக்க வேண்டும் என்று சொல் வழக்கமும் உண்டு நம் நாட்டில்.
அரசமரம்: தேவ விருட்சம் என்று சொல்லப்படும் இந்த மரமும் மனிதனுக்கு பல வகைகளில் பயனுள்ள மரம். பெண்களில் கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு இந்த மரம் நல்ல தீர்வு. குழந்தை இல்லாத பெண்கள் அரச மரத்தை சுற்றுவது வழக்கம் அரச மரத்தின் காற்று கர்ப்பப்பையை பலப்படுத்துகிறது. மேலும் அரசம் பழம், அரச மர பட்டை இவை அனைத்தும் மருந்தாக பயன்படுகிறது. அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாகிவிட்டது என்று வேடிக்கையாக சொல்வதுண்டு. இது குழைத்தை பெற பெண்கள் அரச மரத்தை சுற்றி வருவதை பற்றி சொல்லும் வழக்கம்.
வேம்பு: இதை பற்றி சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை. மிகவும் முக்கிய மருந்து பொருளாகவே இந்த மரம் விளங்குகிறது. விவசாயத்திற்கும், கால்நடைகளும், மனிதனுக்கும் மிகவும் பயனுள்ள மரங்களில் முதன்மையானது வேம்பு தான். அம்மை நோய் என்று சொன்னவுடன் சட்டெண்ட நினைவிற்கு வருவது இந்த வேம்பு தான்.
அத்தி மரம்: சிம்லா அத்தி, பேயத்தி என்று அத்தி மரத்தில் சில வகைகள் உள்ளன. நம் ஊர்களில் வயல் வெளிகளில் அதிகம் காணப்படும் பேயத்தி தோல் நோய்களை குணப்படுத்த, தேக ரணங்களை குணப்படுத்த மருந்தாக பயன்படுகிறது. அத்தி பழம் ஆண்மை பலத்தை அதிகரிக்க நல்ல மருந்து.
புங்கை மரம்: வீட்டு வாசலில் இந்த மரத்தை வைத்திருப்பார்கள். வேர் அதிக பலம் இல்லாததால் வீட்டின் அருகில் இதை வளர்க்கலாம். கோடை காலங்களில் இந்த மரத்தின் கீழ் அமர்ந்தால் குளிர்ச்சியாக இருக்கும்.
இந்த மரங்கள் அனைத்தும் மழைதருவதிலும், வெயிலின் தாக்கத்தை குறைப்பதிலும் முக்க பங்காற்றுகிறது.